சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக  16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் கொரோன தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 3,698 களப்பணியாளர்கள் மூலம் 1,82,815 வீடுகளில் 6,88,473 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.