கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு உலகப்போர் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பே 14வயது சிறுவன் ஒருவன் துல்லியமாக கணித்து கூறியுள்ளார். அவரது கருத்து, அப்போது விளையாட்டாக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, அது 100 சதவிகிதம் உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் 14வயதே ஆன அபிக்யா ஆனந்த் ( Abighya Anand) என்ற சிறுவன். பல ஆண்டுகளாக இவர் ஜோதிடம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு அவரது ஜோதிட அறிவை பிரபல பத்திரிகை ஒன்று சோதித்து பார்த்தது. அப்போது இந்த சிறுவன் தெரிவித்த கருத்துக்கள், தெளிவான பதில்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஏராளமானோர் அவரது கருத்துக்களை ஏளனம் செய்து வந்தனர்.
அதுபோலவே, தங்கம் மற்றும் வெள்ளி விலை விபரங்கள் மற்றும் பிற இந்திய தொழில் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கணித்து அவ்வப்போது தகவல்களை வெளியிடுவார்.
அதுபோன்றே, கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 22ந்தேதி அன்று யுடியூப் சேனல் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையாகி உள்ளது. தற்போது, அது பிரபலமாகி வருகிறது.
என்ன கூறினார் அபிக்யா ஆனந்த்
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020ம் ஆண்டு ஏப்ரல் வரை உலகம் முழுவதும் பெரும் தாக்கம் ஏற்படும், இந்த காலக்கட்டங்கள் மிகவும் கடுமையானது, ஆனால், மே 29ந்தேதி, 2020 அன்றுடன் இவை முடிவுக்கு வந்துவிடும் .
இந்த கடுமையான காலக்கட்டம், 2019ம் ஆண்டு இது ஆரம்பமாகிறது, இது கிரகங்களின் சேர்க்கை காரணமாக உருவாகும், மே மாதம் இறுதியில், இந்த தாக்கம் குறைந்து சாதகமான நிலை உருவாகும்.
இந்த 6 மாத காலப்பகுதியானது, ஒரு உலகப் போர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகளாவிய நோய் பரவுதல் மற்றும் உலகளாவிய பதட்டங்கள் அதிகரிக்கும்.
இதன் உச்சத்தில் மார்ச் 31 ஆம் தேதி இருக்கும், இது இந்த மாநிலத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கும், உலகம் பதட்டமாக இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் வைரஸுக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான போர் தீவிரமாகும், இதன் தீவிரம் மார்ச் 31ந்தேதி கடுமையாக இருக்கும்.
எவ்வாறாயினும், மே 29 அன்று பூமி இந்த கடினமான காலத்திலிருந்து விலகிச் செல்லும் போது, உலகளாவிய நோயின் வீழ்ச்சியைக் குறிக்கும், ஏனெனில் அது பரவுவது மிகவும் குறையத் தொடங்கும்.
தனது கணிப்பு ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய அபிக்யா, அன்றைய தினம் செவ்வாய் சனி மற்றும் வியாழனுடன் இணையும், சந்திரனும் ராகுவும் இணைவார்கள், ராகு என்பது சந்திரனின் வடக்கு முனை.
ஜோதிடத்தில் செவ்வாய் சனி மற்றும் வியாழன் ஆகியவை சூரிய மண்டலத்தின் வெளிப்புற வளையத்தில் இருப்பதால் அவை மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படுவதால் இது ஒரு அரிய நிகழ்வு.
சந்திரன் மற்றும் ராகு இணைப்புகளைப் பொறுத்தவரை, இது மிகவும் சக்தி வாய்ந்தது, ஏனெனில் சந்திரன் நீரைப் பரப்பும் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகுவைப் பொறுத்தவரை இது தொடர்பு கிரகமாகக் கருதப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலும் இருமல் மற்றும் தும்மல் அதிக அளவில் இருக்கும், இதனால் நோய் மேலும் பரவும்.. இந்த நேரத்தில் சமூக தூரத்தை கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1வரை.
இந்த அபாயரகமான காலக்கட்டம் மே 29 ஆம் தேதி உடைக்கப்படும், அதன்பிறகு கிரக நிலை சாதகமாக உள்ளது.
இவ்வாறு அந்த சிறுவன் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மந்தநிலை 2021 நவம்பரில் முடிவடையும் என்றும் கணித்துள்ளார்.
விழித்திரு – விலகி இரு – வீட்டிலேயே இரு… கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…