கோவை
திருமண விழாவுக்குச் செல்ல பொதுமக்கள் ஆட்சியர்கள் அனுமதி கோரி வருகின்றனர்
’’ இந்த கொரோனா பிசாசு, நம்மை எல்லாம் கலெக்டர் ஆபீஸ் படிக்கட்டுகளில் ஏற வைத்து விட்டதே’’ என பெரும் தனக்காரர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கல்யாண நிகழ்ச்சியில் இரு வீட்டாரையும் சேர்ந்த சொற்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், மணமக்கள் உள்ளிட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பது சில நிபந்தனைகள்.
திருமண விழாவில் பங்கேற்க ,மாவட்டம் விட்டு மாவட்டத்துக்குச் செல்ல ஆட்சியர் அனுமதி பெற வேண்டும்.
ஆட்சியர் அனுமதி கொடுத்தால் மட்டுமே, ஊரு விட்டு ஊரு செல்ல முடியும் என்பதால், அவர் அனுமதி கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கல்யாண பார்ட்டிகள் திரளாக குவிந்திருப்பதைக் காண முடிந்தது.
பல நிபந்தனைகளோடு அந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, 30 கல்யாணங்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளார்.
‘’ மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நியாயமான காரணங்கள் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றும் கூறுகிறார் ,, ஆட்சியர் ராஜாமணி.
– ஏழுமலை வெங்கடேசன்