ட்டி

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வெளி வந்துள்ளன.

மாதிரி புகைப்படம்

சும்மாவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேரம் காலம் பார்க்காமல் சிறுத்தைகள்  உள்ளிட்ட விலங்குகள் செல்லப்பிராணிகள் போல் சுற்றித்திரியும்.

இப்போது கேட்க வேண்டுமா?

ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மலையின் பெரும்பாலான இடங்களை மூடி விட்டார்கள்.

சுற்றுலா பயணிகளை வெளியேற்றி 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.

சாலைகள் எல்லாம் , சகாரா பாலைவனம் போல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சுத்தமாக வாகன நடமாட்டம் இல்லை. ஆள் –அரவம் இல்லை. சத்தமும் இல்லை.

விலங்குகளுக்குக் கொண்டாட்டமாகி விட்டது.

வனத்தில் மறைந்திருந்த சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் குன்னூர் பகுதியில் சுற்றித் திரிவதை அங்குள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் படம் பிடித்துள்ளன.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

– ஏழுமலை வெங்கடேசன்