பொள்ளாச்சி:

மிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதை தடுக்கும் பணியில் மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து,  பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில், சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்  தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கொரோனோ வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாகவும்,  பொள்ளாச்சி , கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கவும், தூய்மை பணிகளை உரிய முறையில் மேற்கொள்வது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டது. மேலும், தூய்மைப் பணிகளை சீரான இடைவெளியில் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்  திருமதி.கஸ்தூரி வாசு , பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு , ஆனைமலை வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வழங்கல் துறை தலைமைப் பொறியாளர், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட  உழவர் சந்தை,காந்தி மார்க்கெட் பகுதிகளில் கொரோனோ வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஆய்வு நடத்தினர். அவருடன்
பொள்ளாச்சி ஜெயராமன் , பொள்ளாச்சி சார் ஆட்சியர் ,வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரும் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சாலையோர வியாபாரிகளிடம், சமூக விலகியிருத்தலை வலியுறுத்தினர். மேலும்,  மக்கள் பொருட்கள் வாங்க வரும்பொழுது இடைவெளிவிட்டு நிற்க வைக்க வேண்டும் என்றும் , முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு முககவசங்கள் வழங்கியும் , கொரோனோ வைரஸ் தொற்று ஒழிப்பு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையிலும் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி, அனைத்து அதிகாரிகளும் முகக்கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.