சென்னை:

தென்மாநிலங்களைச்சேர்ந்த  மக்களின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான பேரின்   சோதனை முடிவுகள் வெயிட்டிங்கில்  உள்ள தகவல்  விவரம் வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை எடுத்து வரும் மாநில அரசுகள், கொரோனா பாதிப்பு சந்தேகம் காரணமாக, ஏராளமானோர் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படாமல் வெயிட்டிங்கில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரத்த மாதிரிகளில், பலரது ரத்த சோதனை முடிவுகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவுகள் பாசிடிவாக  இருப்பின் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது வெட்டவெளிச்சமாகி விடும்..

நேற்று  இரவுவரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 தென் மாநிலங்களில் இருந்து ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் எத்தனை அதன் முடிவுகள் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு:

சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் : 333

சோதனை முடிவுகள் :  303

கொரோனா தொற்று இல்லை : 300

கொரோனா தொற்று உறுதி : 3

சோதனை முடிவு  வெயிட்டிங் : 27

ஆந்திரா:

சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் : 128

சோதனை முடிவுகள் : 111

கொரோனா தொற்று இல்லை : 108

கொரோனா தொற்று உறுதி : 3

சோதனை முடிவு வெயிட்டிங் : 17

கர்நாடகா:

சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் : 1207

சோதனை முடிவுகள் : 970

கொரோனா தொற்று உறுதி : 15

சோதனை முடிவு வெயிட்டிங் : 222

கேரளா:

சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் : 3436

சோதனை முடிவுகள் : 2393

கொரோனா தொற்று உறுதி : 40

சோதனை முடிவு வெயிட்டிங் : 1003