சென்னை
வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஒரு முன்னோட்டமாக வரும் ஞாயிறு அன்று சுய ஊரடங்கு நடத்தப் பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்தார். அன்று காலை 7 மணி முதல் இரவு வரை யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சுய ஊரடங்கு எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பை அளிக்க உள்ளன. இவ்வாறு சுய ஊரடங்கு நடக்கும் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களின் நிலை குறித்து கேள்விகள் எழுந்தன.
அதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இடமும், உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு இட்டது. அதையொட்டி சமூக நலக் கூடங்களில் இவர்களைத் தங்க வைத்து உணவு வழங்க உள்ளதாக மாநகராட்சி உத்திரவாத்ம் அளித்துள்ளது..