சென்னை:
சட்டமன்றத்தில் இருந்து திமுக வளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து உள்ளது.
தமிழகத்தில் நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர கடந்த கூட்டத் தொடரின்போது வலியுறுத்தினோம். அதற்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆனால், தற்போது அது செயல்படுத்தப்படவில்லை.
நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2007 2010 மற்றும் 2016ம் ஆண்டு ஊதியம் உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக கூறிய அமைச்சர், 80 சதவீதம் வரை தான் ஊதிய உயர்வு வழங்கியுள்ளார்.
இதை நாங்கள்,. ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் அமைச்சர் மழுப்பலான பதிலையே கூறுவதாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி கூறினார்.
அதுபோல, நகை கடன் குறித்த கேள்விக்கு அமைச்சர் எந்த ஒரு பதிலும் விளக்கமும் அளிக்க முன்வரவில்லை . அமைச்சர் செல்லூர் ராஜு நீண்ட நேரம் விளக்கம் அளிப்பதை கண்டித்தும், தவறுகளை சுட்டிக் காட்ட தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இதனால் சட்டப்பேரவையில திமுக வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்