டெல்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதி மன்ற பணியாளர்கள் பணி வரைமுறை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக உச்சநீதி மன்ற பொதுச்செயலாளர் சஞ்சீவ் எஸ் கல்கோன்கர் தெரிவித்து உள்ளார்.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதிவேட்டில் அதன் பிரிவுகள் / அறைகளை முடக்குவதற்கும், பதிவேட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு தொகுதிகளாக 3 நாட்கள் பணியாற்ற அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, முதல் தொகுதி மார்ச் 19ல் இருந்து 21ந்தேதி வரை பணியாற்றும் என்றும், 2வது தொகுதி,மார்ச் 23-25ந்தேதி வரை பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.