டெல்லி:
டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர் நிலையத்தில் கீழே இறக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
பால்கர் நிலையத்தில் இன்று 12216 கரிப் ரத்தின் கோச் எண் ஜி 4 & ஜி 5- லிருந்து பயணம் செய்த அந்த குடுமப்த்தினரின் கையில் இருந்த முத்திரையை பார்த்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் சக பயணிகள், இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், அந்த குடும்பத்தினரை பால்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பின்னர் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், அவர்கள் ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே குடுமபத்தை சேர்ந்த நான்கு பேர் இவர்கள் பயணம் செய்து வந்த இரண்டு ரயில் கோச்களும் சூரத் ரயில் நிலையத்தை அடைந்ததும், முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு தெரிவிக்கையில், ஒரே குடுமபத்தை சேர்ந்த நான்கு பேரும் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.