குருகிராம்:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் போலி சானிடைசர் தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்ட உள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அடிக்கடி கைகளை சானிடைசர் மற்றும் சோப்புகளைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில சுகாதாரத்துறைகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதும் கைகளை கழுவப்பயன்படுத்தப்படும் sanitizer (சுத்திகரிப்பான்)க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இதை சாதகமாக பயன்படுத்தி, அரியானா மாநிலம் குருகிராமில் போலி சானிடைசர் தயாரித்து வந்த நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டு,  மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  சார்பில், அதற்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 5,000 கை துப்புரவு சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக,  போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ரிப்பன் மேத்தா தெரிவித்துள்ளார்.

மேலும், போலி சானிடைசர் தயாரித்த நிறுவனம் தொழில்துறை எண்ணெய்களை உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது சானிடைசர் தேவையை கண்டு,  கை சுத்திகரிப்பாளர்களை உற்பத்தி செய்யத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.