மார்ச் 13 அன்று நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்க ரயில் நிலைய சுரங்கப்பாதையில் (மெட்ரோ ரயில்) கொரோனா வைரஸ் காரணமாக முகமூடி அணிந்து சென்ற இரண்டு பயணிகள் மீது இனவெறி துன்புறுத்தல் சம்பவம் நடந்துள்ளது.
சுரங்க ரயில் நிலைய மேடையில் இருந்த முகமூடி அணிந்த தம்பதியரை துன்புறுத்திய நபர், ஒரு கட்டத்தில், “நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்களா? நான் அதற்கு அச்சப்படமாட்டேன்” என்று ஆவேசமாக கூறினார்.
ரயில் நிலையத்திலிருந்து அந்த தம்பதியர் பாதுகாப்பாக வெளியேற சக பயணி ஒருவர் உதவினார், இந்த சம்பவத்தை படம் பிடித்த ஒருவர், அந்த வீடியோவை வெளியிட்டார்.
நியூயார்க் நகரில் கடந்த மார்ச் 7 ம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக அவசர நிலை உள்ளதும், மார்ச் 13 முதல் 500 பேருக்கு மேல் கூடும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் தடைவிதித்து நியூயார்க் மேயர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளது நினைவு கூறத்தக்கது.
இந்நிலையில், இதுபோன்ற ஒரு இனவெறி துன்புறுத்தல் நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.