வலென்சியா
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 119 பேருடன் ஒரு விபச்சார விடுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உல்லாச விடுதிகளில் சட்ட அனுமதியுடன் விபச்சாரம் நடைபெறுவது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்நாட்டின் வலென்சியா நகரில் உள்ள ஒரு விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ளவர்கள் இலவசமாக மது அருந்தலாம், நல்ல உணவு உண்ணலாம் அவ்வளவு ஏன் எல்லாவிதமான ஜாலிக்கும் வசதி உண்டு. ஆனால் அங்குள்ளவர்கள் சோகமாக உள்ளனர்.
ஏனென்றால் தனிமைப் படுத்தப்படுவதற்கு முதல் நாள் அந்த விடுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரிய வந்ததே ஆகும். இதனால் அந்த விடுதியின் உரிமையாளர்கள், விடுதிப் பெண்கள், காவலர், சுத்தம் செய்வோர், மற்றும் 86 வாடிக்கையாளர்கள் என 119 பேர் விடுதியில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் யாருக்கேனும் தொற்று இருந்தால் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் அன்று இரவு மட்டும் பல வாடிக்கையாளர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
தற்போது விடுதியில் உள்ள பல ஆண்களும் மனைவியிடம் தாங்கள் நண்பர்களுடன் ஒரு மது விருந்துக்குச் செல்வதாகச் சொல்லி விட்டு வந்தவர்கள் ஆவார்கள். அனேகமாக இந்த தகவல் வெளி வந்ததால் அவர்கள் கொரோனா தாக்குதலை விட மிக அதிகமான தாக்குதலைச் சந்திக்க நேரிடலாம்.