ரியாத்

வுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனம் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையலாம் எனக் கூறப்படுகிறது.

உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.   குறிப்பாகச் சீனாவில் உற்பத்தியில் கடும் பாதிப்பு உண்டாகி கச்சா எண்ணெய்த் தேவை அடியோடு குறைந்துள்ளது.  இதே நிலை பல நாடுகளிலும் ஏற்ப்ட்டுள்ள்த்கால் கச்சா எண்ணெய் விலை 32.98 டாலராகக் குறைந்தது.   இது எண்ணெய் உற்பத்தி நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியது.

கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதி கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து விவாதிக்க வியன்னாவில் அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கூடினர்   இந்தக் கலந்தாய்வில் ஒபேக் கூட்டமைப்பு நாடுகளும் அமைப்பில் இல்லாத நாடுகளும் கூடின.   அப்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனப் பல நாடுகள் யோசனை தெரிவித்தன.

இந்த கோரிக்கையை ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் மறுத்துள்ளன.  இந்நிலையில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் நிறுவனமான அராம்கோ நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது.  இதனால் நேற்று மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.  தொடரும் உற்பத்தியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.