டில்லி
மகாராஷ்ட்ர மாநில தின்யன்கங்கா புலிகள் காப்பகத்திலிருந்த புலி ஒன்று தெலங்கானா வரை சுமார் 2,000 கிலோமீட்டரைக் கடந்து துணையைத் தேடும் அரிய நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், துணைதேடும் புலியின் கதையை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். புலியின் உடலில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ கருவி வழியே அதன் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அந்த அதிகாரி, தின்யன்கங்கா காப்பகத்தில் புலிகளின் நடமாட்டத்தை கவனிப்பது முக்கியப்பணியாகும். ஒரு புலி பகல் முழுவதும் ஓய்வெடுத்துவிட்டு இரவில் தன் துணையை வயல், கால்வாய், காடுகள் என பலவிடங்களில் தேடித் திரியும் காட்சி வியப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்தப் புலியால் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
புலியின் 2000 கிலோமீட்டர் கடந்த பயணம் சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளிவருகிறது.