நெல்லை:
செவிலியிர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கள் 2பேருக்கு நெல்லை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிஉள்ளது.
2008ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அம்பா சமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், அவரது ஒரே மகனும் கோவையில் படித்து வந்தார். இந்த நிலையில், தனியாக வீட்டில் இருந்த செவிலியர் தமிழ்ச்செல்வியை, ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பான வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டி.என்.ஏ சோதனை மூலம், கல்லிடைக்குறிச்சி ராஜேஷ், அயன்சிங்கம்பட்டி வசந்தகுமார் ஆகிய 2 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 2 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் ஏனைய குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.