டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே தொடரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
இன்றைய தேர்தல் முடிவுகளில் 50 இடங்களுக்கு மேல் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.
பாஜகவை மடக்க கெஜ்ரிவால் பயன்படுத்திய யுத்தி “டீனா” (TINA- There Is No Alternative). இந்த கேள்வியை அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு முறையும் எழுப்பினார். மேலும் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கிண்டலாக மீம்ஸ்களை தொகுத்து வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார்.
டெல்லியில் 3-ஆவது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பதற்கு அவரது வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் அவரது பிரசார யுக்தியும் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனது வெற்றியின் கொண்டதை தன் மனைவி சுனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு இரட்டிப்பு மகிழ்ச்சியில் கொண்டாடினார்.