ராவல்பிண்டி: பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் நாளில் 233 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது வங்கதேச அணி.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் முகமது மிதுன் அதிகபட்சமாக 63 ரன்களை அடித்தார்.
நஸ்முல் ஹொசைன் 44 ரன்களும் லிட்டன் டாஸ் 33 ரன்களும் ஹேக் 30 ரன்களும் அடித்தனர். டெஸ்ஜுல் இஸ்லாம் 24 ரன்களை அடித்தார். இறுதியில், 82.5 ஓவர்களில் வங்கதேச அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும் முகமது அப்பாஸ் மற்றும் ஹாரிஸ் சொஹைல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் குவிக்கும்பட்சத்தில், வங்கதேசத்தை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.