மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பெண்கள் முத்தரப்பு டி-20 தொடரில், இந்திய அணி இங்கிலாந்திடம் வீழ்ந்து, தனது இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்தது.

இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில், மந்தனா மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார். ஜெமிமா 23 ரன்கள் அடிக்க, மற்ற யாரும் சோபிக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்தது இந்திய அணி.

பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஷிவர் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். கேப்டன் ஹெதர் எடுத்தது 18 ரன்கள்.

இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 124 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

[youtube-feed feed=1]