சென்னை:
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனைக்கும், தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், ஏஜிஎஸ் சினிமா நிறுவனம்,, நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், நடிகர் விஜயின் ரூ.300 கோடி சொத்துக்கான ஆவணங்கள் மற்றும் அன்புசெழியனிடம் ரூ.65 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் மற்றொரு தரப்பினர், இது மத்திய, மாநில அரசின் பழிவாங்கும் செயல் என விமர்சித்து வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில கல்லூரியின் 180-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வருமானவரித்துயினர் சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.