நீலகிரி:
முதுமலை வனவிலங்கு சரணாலயம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன், தனது காலில் கிடந்த செருப்பை அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின சிறுவனை அழைத்து கழற்றியது,. வனத்துறை அமைச்சரின் மிருத்தனமான செயல் என்றும், சாதிய மமதை என்றும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வழக்கமாக யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத் தில் கோவில்களில் உள்ள யானைகள் இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிப்பு செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கான முகாமை தொடங்கி வைப்பதற்காக தமிழக வனதுதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை தந்தார். அங்குள்ள புல்வெளியில் அதிகாரிகள் மற்றும் நீலகிரி கலெட்டர் இன்னசென்ட் திவ்யா உடன் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென நின்று, அந்த பகுதியில் இருந்த பழங்குடியின சிறுவனை, டேய் வாடா என அழைத்து தனது செருப்பின் பக்கிலை கழற்றிவிட கூறினார். அந்த சிறுவனும் அமைச்சர் சீனிவாசன் செருப்பை கழற்றிவிடுகிறார்.
இது தொடர்பான சமூக வளைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இதை வீடியோவை காணும் நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் வனத்துறை அமைச்சரின் செயல் மிருகத்தனமானது என்று கடுமையாக சாடி உள்ளனர்.
சாதிய ரீதியிலான செயல்படும் அமைச்சரவை பதவி நீக்கம் வேண்டும் என்றும், அமைச்சர் ஒருவரே இதுபோல அநாகரிகமாக நடந்துகொண்டது தமிழகத்துக்கும், தமிழக அரசுக்கும் வெட்கக்கேடு என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது வருகிறது….
வனத்துறை அமைச்சருக்கு வன விலங்குகள் போல ஐந்தறிவுதான் போலும்….
மிருகமாக நடந்துகொண்ட வனத்துறைஅமைச்சர் சீனிவாசன் – வீடியோ