சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை பிப்.12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
தமிழகஅரசு பணியாளர்கள் தேர்வை நடத்தி வரும், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் ஏற்கனவே நடைபெற்ற பல டின்பிஎஸ்சி தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத நிலையில், வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் உயர்நீதி மன்ற நீதிபதிகளிடம் முறையிட்டனர்.
வழக்கறிஞர்கள் முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு பிப்.12-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.