சென்னை:

ரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி இன்னும் பெருவாரியான பகுதிகளுக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது.

கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இதுவரை 50 சதவிகிதம் கூட அறிவிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இது, மாநில தேர்தல் ஆணையம் மீது  பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ந்தேதிகளில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இரு கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நேற்று காலை (ஜனவரி2, 2020)  முதல் எண்ணப்பட்டு வருகின் றன. 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று 2வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் அலுவலர்கள் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், திமுக தலைவர் நேற்று 2 முறை மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்த நிலையில், நள்ளிரவு நீதிமன்றத்தில் அவசர வழக்கும் தொடர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”திமுக கூட்டணி 80% இடங்களில் முன்னிலைப் பெற்று வரும் நிலையில், அதை தடுக்க வேண்டுமென அதிமுகவினரும், அதிகாரிகளும் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறார்கள்; பல இடங்களில் திமுகவினர் வெற்றிபெற்று விட்டபோதும் அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு தகுந்தார்போல பல இடங்களில் நடைபெற்ற  தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பல குளறுபடிகள், சண்டைகள், வாக்குவாதங்கள் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி வருகின்றன.,

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை,  திமுக தலைவர் ஸ்டாலின்  கூறும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருப்பதாக அரசியல் விமர்சகங்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

இன்று காலை 11 மணி அளவில், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தகவல்படி, கிராமப்புற ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தல் முடிவுகள் 50 சதவிகிதம் கூட வெளியிடப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது….

காலை 11 மணி நிலவரம்:

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

அறிவிக்கப்பட்டது: 40.78%

அறிவிக்கப்படாதது: 59.22%

இதில் அதிமுக: 14.37%

திமுக: 21.36%

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

அறிவிக்கப்பட்டது: 75.89 %

அறிவிக்கப்படாதது: 24.11%

இதில் அதிமுக: 26.15 %

திமுக: 32.1%

கிராம ஊராட்சித் தலைவர்கள்

அறிவிக்கப்பட்டது: 78.17 %

அறிவிக்கப்படாதது: 21.84%

இதில் கட்சி பாகுபாடு கிடையாது

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

அறிவிக்கப்பட்டது: 56.67 %

அறிவிக்கப் படாதது: 43.38%

இதில் கட்சி பாகுபாடு கிடையாது