இன்று ,25.12.2019 அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி குறித்த நெட்டிசன் பதிவு
மாதங்களில் சிறப்புப் பெற்றது மார்கழி.
திதிகளில் நிறைவானதாகக் கருதப்படுவது அமாவாசை.
அறிவு, ஞானத்தின் அடையாளமாகத் திகழ்வது மூல நட்சத்திரம்.
இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் , அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர்.
அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி.
அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் , சகல மங்களங்களும் உண்டாகும்.
நினைத்த காரியம் கைகூடும்.
துன்பங்கள் விலகும்.
இன்பங்கள் பெருகும்.
“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயு புத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் ”
ஜெய் ஸ்ரீராம்…!