
புதுடெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பாக நடைபெறும் சம்பவங்கள், மறைந்த அமைச்சர் அருண்ஜெட்லியின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண்ஜெட்லி கடந்த 1999 முதல் 2012 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது, அங்கே பல முறைகேடுகள் நடைபெற்றதாய் புகார்கள் எழுந்தன. அப்போதைய காங்கிரஸ் அரசு அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டாலும், ஜெட்லி மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், ஜெட்லியின் நெருங்கிய நண்பராக இருந்த ரஜத் ஷர்மா, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றாலும், இடையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
கிரிக்கெட் சங்கம் தொடர்பான பழைய விவகாரங்கள் கிளப்படுவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தற்போதைய பாரதீய ஜனதா ஆட்சியிலும், ஜெட்லியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கிறதே என்று ஜெட்லியின் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கிறார்களாம்.
ஜெட்லியுடன் சரியான உறவில் இருந்திராத அமித்ஷாதான் இதற்கு காரணம் என்று சிலர் கூற, அமித்ஷாவுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
[youtube-feed feed=1]