புபனேஷ்வர்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, டிசம்பர் 22ம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெறும் நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சியில் கவனம் செலுத்தாமல், ஹாயாக பொழுதைப் போக்கியுள்ளனர்.

முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது. எனவே, மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.

ஆனால், இதைப்பற்றி இந்திய வீரர்கள் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அவர்களில் பலர் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் தங்களின் நேரத்தை செலவிட்டனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் கேப்டன் விராத் கோலியும் இணைந்துகொண்டு, சக வீரர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். மேலும், அந்தப் படங்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

“விடுமுறை தினம் என்பதால், வீரர்களுக்கு இத்தகையப் பொழுதுபோக்கு கட்டாயம் தேவைப்படுகிறது” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ, போட்டியை நாளை வென்றால் சரி! என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.