சென்னை:

றைந்த அதிமுக தலைவரும், முதல்வருமான ஜெயலலிதாவின் உருவபொம்மையுடன் கூடிய சவப்பெட்டியை வைத்து தேர்தல் பிரசாரம் செய்தது தொடர்பான வழக்கல், அமைச்சர் மா.பாண்டிய ராஜன் சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 19ந்தேதி  ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சவப்பெட்டி மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரம் செய்து தேசிய கொடியை அவமதித்ததாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா. பாண்டியராஜன் மீது கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ந்தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்போது அறிவிக்கப்பட்டிருந்த  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக ஓ.பி.எஸ். அணி சார்பில் 207ம் ஆண்டு  ஏப்ரல்  6-ந்தேதி கொருக்குப்பேட்டை பாரதி நகர் மீனம்மாள் நகர் சந்திப்பு பகுதியில் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த பிரசாரத்தில் தற்போதைய அமைச்சர் பாண்டியராஜன் உள்பட சிலர் கலந்துகொண்டனர். அதில்,  மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போன்று  மெழுகு பொம்மையுடன் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது. சவப்பெட்டியின் மீது தேசியக் கொடியை போர்த்தி இருந்தனர்.

இதற்கு தேர்தல் அதிகாரி ஆட்சேபம் தெரிவித்து,  தொடர்ந்து பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறினார். இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டது.

இத தொடர்பாக தேர்தல் அதிகாரி தொடர்ந்ம புகாரின் பேரில் அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வி, குப்பன் ஆகியோர் மீது  தேசிய கொடியை அவமதித்ததாக ஆர்.கே.நகர்  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கின் 19ந்தேதியன்று விசாரணைக்கு அமைச்சர் மா.பாண்டிய ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது