சென்னை:

மிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதை எதிர்த்து, விசிக தலைவர் திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஊரகப்பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின்  மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மூலம், மறைமுக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படும் என  என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணை  தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல எனக் கூறி திருமாவளவனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும, இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம்’ என நீதிபதிகள் கூறினர்.