மலப்புரம், கேரளா
ராகுல் காந்தி உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்த அரசுப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தற்போது கேரளாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அவர் இன்று மலப்புரம் அருகே உள்ள கருவாரக்குண்டு என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது ராகுல் காந்தி தனது உரையை யாராவது மலையாளத்தில் மொழி பெயர்க்க முடியுமா எனக் கேட்டார். அந்த பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவியான ஃபாத்திமா சஃபா என்பவர் மொழி பெயர்க்க முன் வந்தார். அதைத் தொடர்ந்து ராகுல் உரையாற்றும் பொது உடனடியாக ஃபாத்திமா சஃபா மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்தி உரை முடிந்ததும் அவருக்கு சாக்லேட்டை பரிசாக அளித்தார்.
ஃபாத்திமா சஃபா, “ராகுல் காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரே மேடையில் அவருடன் கலந்துக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நான் மகிழ்வுடன் பயன்படுத்துக் கொண்டேன். எனக்குச் சிறிது பதற்றமாக இருந்தது. ராகுல் காந்தி எனது மொழிபெயர்ப்புத் திறனைப் பாராட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பகுதியில் வீடியோ செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் சஃபாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த பதிவு பின் வருமாறு.
Shri @RahulGandhi's addresses a group of young students as he inaugurates the new science block in Karuvarakundu school in Malappuram, Wayanad. pic.twitter.com/GnqeYLrJP1
— Congress (@INCIndia) December 5, 2019