ஐதராபாத்:
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஐதராபாத் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானா மாநிலம் மட்டுமன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது இரு சக்க வாகனம் மூலம் வீட்டுக்கு திரும்பிய கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகனம் இடையில் பஞ்சராகி உள்ளது. இதுகுறித்து , தன் தங்கைக்கு போன் செய்து கூறியுள்ளார். அவர், ` பிரியங்கா ரெட்டியே உடனே பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடு’ என்று கூறியுள்ளார். இறுதியாக இரவு 9.22 மணிக்கு பேசிய நிலையில், 9.44 மணிக்கு அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பிரியங்காவைத் தொடர்பு கொண்டபோது, அவருடைய செல்போன் `ஸ்விட்ச் ஆஃப்’ ஆனது தெரிய வந்துள்ளது. இதனால், பதற்றம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், அவர் கூறிய இடத்துக்கு விரைந்து வந்த நிலையில், அங்கு பிரியங்கா இல்லாததால், உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கூறிய பிரியங்காவின் சகோதரி பவ்யாவுடன் கடைசியாக அழைத்தது, தனது ஸ்கூட்டரின் பின் டயர் பஞ்சரானால், சிக்கலில் சிக்கியிருப்பதாகவும், தெரியாத நபர்கள் தன்னிடம் வந்து உதவி செய்வதாக கூறுவதாகவும் தெரிவித்தாக தெரிவித்ததாகவும், இதனால் தனக்கு பயமாக இருப்பதாகவும், தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்கும்படி தெரிவித்தகதாவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை, அந்த பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் பாதி எரிந்த நிலையிம் இளம்பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு காவல்துறையினருடன் சென்ற பிரியங்கா குடும்பத்தினர் அது பிரியங்காவின் சடலம் என்பதை அறிந்து கதறி துடித்தனர்.
அவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் #JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரென்டிங் செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனைகள் வழங்க சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் பிரியங்கா கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து இருப்பதாக ஐதராபாத் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.