சென்னை:
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுமார் 500 ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளாகி வரும் அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இறுதித்தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்ய வேண்டும் என்றும், அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]