சென்னை:

மிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 10 நாங்கள் அங்கு முகாமிடும் அவர்,  சிகாகோ, ஹூஸ்டன், நியூயார்க், வாஷிங்டன் முதலிய நகரங்களுக்கு சென்று தமிழக திட்டங்களுக்கு நிதி திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 08.11.2019 முதல் 17.11.2019 வரை அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதித்தல், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்தல், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப்பணிகளை பார்வையிடுதல், சிகாகோ நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தல், சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, Global Community Oscars 2019 விழா மற்றும் Indian American Business Coalition & American Tamil Entrepreneurs சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

08.11.2019 அன்று அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றடைகிறார்.

09.11.2019 அன்று மாலை சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

10.11.2019 அன்று American Multi Ethnic Coalition Inc., சார்பாக நடத்தப்படும் Global Community Oscars 2019 விழாவில் International Rising Star of the year – Asia Award என்ற விருது பன்னீருக்கு வழங்கப்பட இருக்கிறது.

12.11.2019 அன்று சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் Global Community Oscars 2019 விழா மற்றும்Indian American Business Coalition & American Tamil Entrepreneurs சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

13.11.2019 அன்று  வாஷிங்டன் டிசி செல்கிறார். அங்கு அவருக்கு Indian American Business Coalition, USA மற்றும் American Multi Ethnic Coalition Inc., அமைப்புகளின் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

14.11.2019 அன்று ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15.11.2019 அன்று ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board ஐ தொடங்கி வைக்கிறார்.

16.11.2019 அன்று நியூயார்க் சென்றுIndian American Community & Tamil Associations சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மேற்படி சுற்றுப்பயணத்தின் போது, நிதித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உடன் செல்கிறார். அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 17.11.2019 அன்று தமிழ்நாடு திரும்புகிறார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.