உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.
உளவு பார்த்த அதிகாரியின் அடையாளத்தை வெளியிட வேண்டும் என புலனாய்வுக் குழுத் தலைவர் டெவின் நூன்ஸிடம் டிரம்ப் மற்றும் அவரது கூட்டணியினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று இந்த முடிவை உளவு அதிகாரியின் வழக்கறிஞர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சியினர், குழுவின் தலைமை அதிகாரியான ஏடம் ஸ்சிஃப், டி காலிப் ஆகியோரின் அனுமதி இன்றியே உளவு அதிகாரியிடம் கேள்வி கேட்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
உளவு பார்ப்பது தவறான பணியும் இல்லை, குற்றச்சாட்டுக்களும் உள்நோக்கம் கொண்டது இல்லை என்றும், உள்நோக்கத்தோடு குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள உளவு நபரின் வழக்கறிஞர் மார்க், குறித்த நேரத்தில் பதிலை நாங்கள் அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், குடியரசு உறுப்பினர்களின் எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும் என்றும், உளவு பார்த்த நபரின் பெயர் உட்பட அடையாளங்களை கோரும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கப்படாது என்றும் மார்க் தெரிவித்துள்ளார் இதற்கு புலனாய்வுக் குழுத் தலைவர் டெவின் நூன்ஸ் தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் அளிக்கப்படாத நிலையில், அதிபர் டிரம்ப் இது குறித்து சந்தேகம் எழுப்பிய உடன், பதில் அளிக்கப்பட்டது.
உளவு பார்த்த நபரின் தகவல்களால், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் எதிர்கட்சியினரை அடக்க டிரம்ப் முற்படுகிறாரா ? என்கிற ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களாட்சிக் கட்சியினர் கோரிக்கை வைக்கும் அளவுக்கு பாதை வகுத்துக் கொடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக 11 நபர்களை அழைத்துள்ள அவர்கள், மின்சக்தி துறை செயலாளர் ரிக் பெர்ரி, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரையும் அழைத்துள்ளனர். அழைக்கப்பட்ட நபர்கள் கேபிடல் ஹில்லுக்கு வருகை தருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், “அவர்களுக்கும் அந்த நபர் யார் என்று தெரியும். உங்களுக்கும் அது யார் என்று தெரியும். இது தொடர்பாக எந்த செய்திகளையும் நீங்கள் வெளியிடவேண்டிய தேவை இல்லை. இதன் மூலம் மக்களுக்கு ஆற்றும் ஒரு மிகச்சிறந்த சேவையை நீங்கள் செய்வீர்கள்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உளவு பார்த்த நபரின் மற்றொரு வழக்கறிஞரான ஆண்ட்ரூ பி.பகஜ், “மீண்டும் நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். உங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. உளவு பார்த்த நபரின் தனிப்பட்ட தகவல்களை தவிற்த்து வேறு எதை வேண்டுமானாலும் எங்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.