டில்லி:
சமீபத்தில் சீன அதிபர் ஜிஜின்பிங், தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரம் வந்து, அதை பார்வையிட்டு, மகிழ்ந்து, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திவிட்டு சென்ற நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் புதின் தமிழகம் வர இருப்பதாகவும், அப்போது பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகளை காண அவர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தலைநகரில் இருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
சீன அதிபர் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகளிடையே தமிழகத்தின் பெருமை மேலும் உயர்ந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபரும் தமிழகம் வர விருப்பம் கொண்டுள்ளதாகவும், இதையடுத்து ஜனவரியில் அவர் தமிழகம் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.