சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொதுமக்கள் செல்ல தொடங்கி இருக்கின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள புரட்சித்லைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையான ஆா்பிஎப் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் போலீசார் கூடுதல் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும் தீவிர கண்காணிப்பில் அவர்கள் இறங்கி உள்ளனா்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 26ம் இயக்கப்படும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு நாகா்கோவில் வழியாக கொச்சுவேலிக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும் என்று அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.