திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமார், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகுமார், விரைவில் வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டி.கே சிவகுமாரை திகார் சிறையில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீட்டித்த இந்த சந்திப்பில், இருவரும் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.