💇♀️ Something New on this day 💥 #Valimai pic.twitter.com/uNQ3ME5yVE
— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) October 18, 2019
அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தின் டைட்டில் சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘வலிமை’ படத்திற்கு பூஜை மட்டும் போடப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், தலைமுடியை குட்டையாக வெட்டி ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் ‘வலிமை’ என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது .