‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். பின்பு’கொரில்லா’, ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்தார்.
இவருக்கு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமகோ வரவேற்பு உண்டு . இந்த நிலையில் ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை திவ்யங் தக்கர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.