தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஐசரி கணேஷ் தீபாவளி பரிசாக 2500 பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.