மைசூரு

ர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மைசூரு பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இந்த வருடம் பருவமழை அதிக அளவில் பெய்தது.   இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.  அப்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு அதனால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.   குறிப்பாகக் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்வதால் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.   கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.  இதையொட்டி அணையின் பாதுகாப்புக்காக உபரி நீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த உபரி நீர் விநாடிக்கு 10000 முதல் 25000 கன அடி வீதம் திறந்து விடப்பட உள்ளது.  ஆகவே இந்தப் பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அந்த எச்சரிக்கையில் கரையோர வாழ் மக்களும்  தாழ்வான பகுதிகளில் வசிப்போரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.