சென்னை:

மோடி, ஜிஜின்பிங் சந்திப்பு காரணமாக, கடந்த ஒரு வாரமாக சுத்தமாகவும், வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த மாமல்லபுரம், தற்போது இருளடைந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி உள்ளது. இது தமிழக அரசு, மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை தோலூரித்து காட்டி உள்ளது.

இது இந்த வாரம்

இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்து புராதன நகரமான மாம்மலபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு தமிழகஅரசு சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் வரவேற்பு அளித்த நிலையில், மாம்மல்லபுரத்தில் இரு தலைவர்களும் சிற்பங்களை பார்க்கும் வகையிலும், கடற்கரை பகுதிகளும் கடந்த ஒரு மாதமாக சுத்தப்படுத்தப் பட்டு, சாலைகள் செப்பனிடப்பட்டு, வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. மாமல்லபுரமே மின்னொளியில் ஜொலித்தது.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முடிந்து, கடந்த சனிக்கிழமை மாலை அவர்கள் புறப்பட்டு சென்ற நிலையில், அன்றுவரை ஒளிர்ந்த மாமல்லபுரம், நேற்றுமுதல் மீண்டும் இருளடைய தொடங்கிவிட்டது.

சனிக்கிழமை இரவு மாம்மல்லபுரம் சென்ற சுற்றுலாப்பயணிகள், அங்குள்ள வண்ண வண்ண விளக்குகளையும், ஒளிரும் பாறைகளையும் கண்டு மெய்சிலிர்த்த நிலையில், நேற்று இரவு அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஒளிர்ந்த விளக்குகளை காணவில்லை…. ஒளிர்ந்த தெருக்கள் எங்கே என தேட வேண்டிய சூழல் உருவானது. அதுபோல ஜொலிஜொலித்த கடற்கரை கோயிலும் இருளடைந்து காணப்பட்டது.  மேலும் எங்கு நோக்கிலும் குப்பை கூளங்கள்… காணப்பட்டன.

சுற்றுலாப்பயணிகள் தங்களது செல்போன் வெளிச்சம் மூலம் சுற்றுலாத்தலங்களையும், கடற்கரையும் காண வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளாகள்…

இது போன வாரம்

எப்போதும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாம்மல்லபுரம் ஒளிரும் என எதிர்பார்த்து போன சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் இருளடைந்து காணப்பட்டதை கண்டு வேதனை அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக மால்லபுரம் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை கண்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மாமல்லபுரத்தைக் காண வந்து குவிந்தனர்.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு அடியோடி கலைந்த  ஏமாற்றமே மிஞ்சியது. மொத்த விளக்குகளும் அகற்றப்பட்டு கும்மிருட்டாக காட்சியளித்த மாமல்லபுரத்தைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் நொந்து போயினர்.

இது ஒருபுறமிருக்க தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, மாமல்லபுர புராதானச் சின்னங்கள் ஒவ்வொன்றையு ம் காண்பதற்கு குறிப்பிட்ட தொகை மத்திய தொல்துறையினரால் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், குப்பைத் தொட்டி என எதையும் முறையாக ஏற்பாடு செய்துதரவில்லை என்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா தலமான மாம்மல்லபுரம் மீது கடந்த ஒரு வாரமாக காட்டிய  அக்கறை, வெறும் மாய்மாலம் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது  சுற்றுலா பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி பயணத்துக்காக ஓடிஓடி உழைத்த அரசும், மாவட்ட நிர்வாகமும், மீண்டும் குறட்டை விடத்தொடங்கி விட்டது… இனிமேல் எப்போது விழிக்குமோ? மக்கள் விழித்துக்கொண்டால் சரி….

[youtube-feed feed=1]