தோல்பூர்:

ராஜஸ்தானின் தோல்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து துர்கை சிலையை பர்பதி ஆற்றில் கரைக்கும்போது,  நீரில் மூழ்கி 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் துர்கா சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன. நேற்று நவராத்திரி முடிவடைந்ததைத் தொடர்ந்து, பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றறது.

நேற்று ராஜஸ்தானின்  தோல்பூர் பகுதியில் உள்ள துர்கா சிலைகளை அங்குள்ள பர்பதி ஆற்றில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில், பலர் ஆற்றில் மூழ்கியதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த தோல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் ஜெய்ஸ்வால், “துர்கா சிலை கரைக்கும் சம்பவத்தின் போது துரதிருஷ்டவசமாக  பத்து பேர் நீரில் மூழ்கிவிட்டனர்.  அவர்களில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும்  எங்கள் தேடலை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இறந்தவரின் உறவினர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ .1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெய்ஸ்வால்  தெரிவித்தார்.”நீரில் மூழ்கியபோது, சிறுவர்களில் ஒருவர் குளிக்க ஆற்றில் குதித்தார், ஆனால் அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார்.