மும்பை
பி எம் சி வங்கி என அழைக்கப்ப்படும் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வழக்கு தொடர்பாக எச் டி ஐ எல் இயக்குனர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியை சுருக்கமாக பி.எம்.சி (Punjab Maharashtra Co-operative bank) வங்கி என அழைக்கப்படுகிறது. இந்த வங்கி இந்தியாவின் முதல் பத்து பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகும். வங்கியின் தலைவராக வார்யம் சிங் என்பவரும், நிர்வாக இயக்குனராக ஜாய் தாமஸ் என்பவரும் செயல்பட்டு வந்தனர்.
பி எம் சி வங்கி கடந்த 7 ஆண்டுகளாக எச்.டி.ஐ.எல் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து வந்துள்ளது. இதில் அந்நிறுவனத்திற்குக் கடன் அளித்தது மட்டுமின்றி அளித்த கடனில் வாராக் கடனாக இருந்த கடன் கணக்கை ஒவ்வொரு ஆண்டும் பி.எம்.சி வங்கி தலைமை நிர்வாகம் ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கும் ஆண்டறிக்கையில் இருந்து மறைத்துள்ளது.
வாராக்கடன் பட்டியலில் வந்துவிட்டால் எச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு மேலும் கடன் அளிக்க முடியாது என்பதாலேயே இத்தகைய மோசடியை பிஎம்சி வங்கி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தமாக மறைக்கப்பட்ட வாராக்கடன் தொகை ரூ. 4355 கோடி ஆகும்.
இது மட்டுமின்றி மற்றும் ஒரு முறை கேட்டையும் பி.எம்.சி வங்கித் தலைமை நிர்வாகம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட எச்.டி.ஐ.எல் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்த பின்னரும், அந்நிறுவனத்திற்கு இந்த வங்கி ரூ.96 கோடி கடன் வழங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கி இதனைக் கண்டுபிடித்த பின்னர், இது குறித்து விளக்கமளிக்க பி.எம்.சி வங்கியின் தலைவருக்கும் நிர்வாக இயக்குனருக்கும் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தத் தகவல்கள் வெளியானதல் பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி வாசலில் படையெடுக்கத் தொடங்கினர். வங்கியில் பணத்தை எடுக்க கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரிசர்வ் வங்கி அதையொட்டி ஒரு நாளைக்கு ரூ.1000க்கு மேல் எடுக்க தடை விதித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, பி.எம்.சி வங்கித் தலைவர் வர்யம் சிங், நிர்வாக இயக்குமர் ஜாய் தாமஸ், மற்றும் ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் மீதும், எச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் நிறுவனர்களான சரங் வதாவன் மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் மீது போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட கடனைத் தாம் ஆண்டறிக்கையில் இருந்து மறைத்ததையும், திவாலான பின்னும் அந்நிறுவனத்துக்கு கடன் அளித்ததையும் ஒத்துக் கொண்டார். அதையொட்டி எச் டி ஐ எல் நிறுவனத்தின் சில இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]