சென்னை:
நீட் தேர்வின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை தாருங்கள் என தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ கல்வி இயக்ககம் கோரிக்கை வைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ‘நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் முறைகடாக நீட் தேர்வு எழுதி பலர் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளத. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டில் மேலும் 25க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வின்போது, மாணவர்களிடம் பெறப்பட்ட கைரேகையை தங்களுக்கு அனுப்பி வையுங்கள், அதன்மூலம் மாணவர்களின் உறுதித்தன்மையை சோதனையை செய்ய வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்ககம், தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதி உள்ளது.
[youtube-feed feed=1]