டில்லி :

நாடு முழுவதும் பல்வேறு விரைவு ரயில் சேவைகளை தனியாருக்கு மத்தியஅரசு தாரை வார்த்துள்ளது. அதன்படி தேஜஸ் ரயில் சேவைகளையும் தனியார் நிறுவனமான ஐஆர்டிசிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்த  தேஜஸ் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு அதற்கான  இழப்பீடு மற்றும் உடமைகள், பயணிகளின் உயிருக்கு காப்பீடு வழங்கப்படும் எனவும்  ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

பொதுவாகவே நாட்டில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் குறிப்பட்ட நேரத்திற்கு எந்தவொரு பகுதிக்கும் சென்றடைவது கிடையாது. இது மக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரயில்சேவையை தனியார்கள் கைப்பற்றி வரும் நிலையில், ஐஆர்டிசி நிறுவனம்,  டில்லி – லக்னோ மற்றும் மும்பை – ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்களை இயக்க உள்ளது.

இதையடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் தாமதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே என கூறியுள்ளது.

அதன்படி தேஜஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.100 , 2 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.250 என பயணிகளுக்கு இழப்பீடு வழங்ப்படும் என்றும்,  இதுமட்டுமின்றி இந்த தேஜசில் பயணிக்கும் பயணிகளுக்கும் அவர்களது உடமைக்கும் காப்பீடு வழங்குகிறது.

தேஜஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகள் திருட்டு போனால் ரூ.1 லட்சம் மற்றும் பயணத்தின் போது பயணிகளுக்கு உயிரிழப்போ அல்லது விபத்து நேர்ந்தாலோ ரூ.25 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் பயணிகளுக்கென்று சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளுடன் பயணிக்கத் தேவையில்லை என்றும், அவர்களது உடமைகளை பயணத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு, பயணத்தின் முடிவில் மீண்டும் பயணிகளிடமே ஒப்படைக்கும் நடைமுறையயும் அறிமுகப்படுத்த இருக்கிறது.