புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இப்போதைய நிகழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நிலைமையை உற்று கவனிக்கும் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் கூறியுள்ளனர்.
சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, அடக்குமுறை தொடங்கப்பட்டு 55 நாட்களுக்கும் மேலாக ஆகிவிட்டாலும்கூட, நிலைமையில் இன்னும் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. தகவல் தொடர்பு, இணையம் மற்றும் மீடியா ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கே மக்கள் மீதான அடக்குமுறை என்பது இயல்பாகவே இருக்கும்.
மேலும், வழக்கமான வாழ்க்கை செயல்பாடுகளில் பங்கு கெள்ளாமல் மக்களே புறக்கணிப்பு செய்து, தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்யலாம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் ‘ரா’ அமைப்பின் தலைவர் துலாத் கூறுகையில், “இங்கிருக்கும் உங்களில் சிலர் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புவதைப்போல் நான் நம்பவில்லை. அங்கே சமுப நாட்களில் நடந்தது எதுவும் நல்லதில்லை. காஷ்மீரில் நிலவும் மயான அமைதியானது கவலை தருவதாக உள்ளது.