போபால்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த பாலியல் பிளாக் மெயில் வீடியோக்களில் பல பாலிவுட் நடிகைகளும் விலை மாதுகளும் இருந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று பல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வருவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையொட்டி மத்தியப் பிரதேச காவல்துறை துணைத் தலைவர் சஞ்சீவ் சமி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது பெண்கள் அடங்கிய ஒரு குழு பாலியல் வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.
இந்த குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லாப்டாப்கள் மற்றும் மொபைல் போன்களில் சுமார் 4000க்கும் அதிகமான பாலியல் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் பிளாக் மெயில் குழுவினர் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பெண்களை அனுப்பி பல ஒப்பந்தங்களைப் பெற்று விட்டு அந்த பாலியல் நிகழ்வுகளை வீடியோ படமாக்கி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர், இதில் ஏராளமான வீடியோக்கல் பாஜக அமைச்சர்கள் பெண்களுடன் உள்ள பாலியல் வீடியோக்கள் ஆகும்.
மேலும் இந்த விவகாரத்தில் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் ஒருவர் மற்றும் ஆளுநர் ஒருவர் ஆகியோரது வீடியோக்களும் கிடைத்துள்ளதாக எழுந்த தகவலால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பல விலை மாதுகள் மற்றும் பாலிவுட் இரண்டாம் ரக நடிகைகள் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த வீடியோக்களில் ஏதேனும் பிரபல நடிகைகளும் இருந்திருக்கலாம் என்னும் முறையில் காவல்துறையினர் சோதித்து வருகின்றனர்.