சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இவிஎம் எனப்படும் (Electronic Voting Machine) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளளது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வழக்குகளை அடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறதுரு.
இந்த நிலையில், 3 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டிருந்தது. மேலும், மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடி களும் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறி இருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையத்திடம், மாநில தேர்தல்அணையம் வாக்குப்பதிவுக்காக வோட்டிங் இயந்திரம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது தெளிவாகிறது.