சென்னை:

‘இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்’ என்று கூலாக கூறியிருக்கிறார், போலி எஸ்ஐ வேடமிட்டு 7 பெண்களை திருமணம் செய்தும், 6 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ள திருப்பூர் வாலிபர் ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

அமைந்தக்கரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிகாலர் வேலைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், அந்த நிறுவன முதலாளி ராஜேஷ் என்பவரிடம்  சிக்கி சீரழிந்த நிலையில், 3 மாதத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

தொடக்கத்தில் டெலிகாலர் அலுவலகம் நடத்தி வந்த ராஜேஷ், அந்தச் சிறுமியை திருமணம் செய்வ கூறி பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சமயத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி சிறுமிக்கு போன் செய்த ராஜேஷ், ஏற்கனவே இருவரும் ஒன்றாக இருந்த படங்களை காண்பித்து, மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார். பெங்களூரு, ஐதராபாத் என்று அழைத்துச் சென்ற நிலையில், இறுதியில் மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த சிறுமியை ராஜேஷ் கடத்திச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை தேடி வந்த காவல்துறையினர், ராஜேஷையும், அந்த சிறுமியையும் கண்டுபிடித்தனர். அதையடுத்துஅநத சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை யைத் தொடர்ந்து,  ராஜேஷால் தான் அனுபவித்த கொடுமைகளை சிறுமி கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்தே ராஜேஷின்  சுயரூபம் வெளிப்பட்டு உள்ளது.

விசாரணையில், மேன்பவர் ஏஜென்சி நடத்துவதாக தெரிவித்து வந்த ராஜேஷ்  அதற்காக 22 பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்ததாகவும்,. அவர்கள், மூலம் வெளிநாடு மட்டுமின்றி இங்கேயும்  மெடிக்கல் சீட், இன்ஜினீயரிங் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரை அலுவலகத்துக்கு வரவழைத்து மடக்கி உள்ளார்.

பல மொழிகள் பேசத்தெரிந்த ராஜேஷிடம், கல்லூரி இடத்துக்காக ஏராளமான பெண்கள் பணம் செலுத்திய நிலையில், அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக பலர் புகார் அளித்த நிலையில், ராஜேஷ் தலைமறைவாகி உள்ளார்.

சிறுமி கடத்தல் வழக்கில் ராஜேஷை நாங்கள் தேடியபோது, அவர் அவ்வப்போது மொபைல் எண்ணை மாற்றி வந்ததும் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து அவரை கண்காணித்து பிடித்ததாக கூறியுள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்டவிசாரணையில், போலிஸ் இன்ஸ்பெக்டர் என்று பொய்க்கூறியும் பல பெண்களை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தம் 7 பெண்களை திருமணம் செய்து 6 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தான்  இரண்டு பயங்கரமான குற்றவாளிகளை சுட்டுக் கொன்ற ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறி கடந்த ஆறு ஆண்டுகளில் 7 பெண்களை திருமணம் செய்தும்,  ஆறு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யவும் பயன்படுத்தி உள்ளதாகவும் சுமார் 40 லட்சம் அளவுக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை, திருச்சூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பதி, கலஹஸ்தி ஆகிய இடங்களில் அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,  மேலும் பல பெண்களும் அவருக்கு இரையாகியிருக்கலாம்  என்றும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏன் பல பெண்களை ஏமாற்றினீர்கள் என்று காவல்துறையினர் விசாரித்த போது, `இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்” என்று ராஜேஷ் கூலாகப் பதில் தெரிவித்ததாகவும், விசாரணையின் போது ஒரு வரி அளவிலேயே சுருக்கமாக பதில் அளித்ததாகவும், அவருக்கு பின்னணியாக வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.