மும்பை
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கு பெரும் இந்திய வீரரக்ள் பெயர் அறிவிக்கபட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்க்கு இடையே 3 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் விசாகப்பட்டினத்தில் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10 முதல் 14 வரையிலும் ராஞ்சியில் அக்டோபர் 19 முதல் 23 வரையி;லும் நடைபெற உள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ள உள்ள 15 இந்திய வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முந்தைய அணியில் இடம் பெற்றிருந்து கே எல் ராகுல் தற்போதைய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள வீரர்களில் மாற்றம் ஏதும் இல்லை.
தற்போதைய அணியில் விராட் கோலி, (தலைவர்), மயன்க் அகர்வால், ரோகித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ஹனுமா விகரி, ரிஷப் பந்த், விரித்திமான் சாகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, மற்றும் ஷுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர்.